உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / எரிவாயு தகனமேடையில் மக்கர் செய்யும் பர்னர்கள்

எரிவாயு தகனமேடையில் மக்கர் செய்யும் பர்னர்கள்

திருச்சி,:மணப்பாறை நகராட்சியின் எரிவாயு தகனமேடை பர்னர்கள் வேலை செய்யாமல், இறந்தவர்களின் உடல்களை புரட்டி போட்டு எரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சந்தை அருகே எரிவாயு தகனமேடை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இதன் செயல்பாடுகள் தனியாரிடம் இருந்தா லும், எரிவாயு தகனமேடையின் பராமரிப்பு செலவுகளை நகராட்சியே மேற்கொள்கிறது. இந்நிலையில் முறையான பராமரிப்பு இல்லாமல், தகன மேடையில் உடல்களை எரிக்கும் ஆறு பர்னர்களில், ஐந்து பர்னர்கள் வேலை செய்யவில்லை. இதனால் ஒரு பர்னர் மூலம் வெளியாகும் தீயை வைத்தே உடல்கள் எரிக்கப்படுகின்றன. எரிக்கும் போது, ஒரு பக்கம் மட்டுமே உடல் எரிந்து சாம்பலாகும். இதனால் மீண்டும் உடலை மறுபக்கம் திருப்பியும், புரட்டி போட்டும் எரித்து வருகின்றனர். ஆறு பர்னர்களும் செயல்பட்டால், உடல் சிறிது நேரத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும். ஆனால் ஒரு பர்னர் மட்டும் வேலை செய்வதால், நீண்டநேரம் ஆவதுடன், பாதி எரிந்த உடலை, மீண்டும் திருப்பி வைத்து எரிக்கும் அவலநிலை உள்ளது.நகராட்சியின் மெத்தனப் போக்கே இதற்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், உடனடியாக எரிவாயு தகனமேடையை சரி செய்து, இறந்தவர்களின் உடல்களை நல்லமுறையில் எரியூட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை