| ADDED : பிப் 16, 2024 02:34 AM
திருச்சி:மத்திய அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் மேம்பாட்டு பணிகளுக்காக 2019 முதல் 2021ம் ஆண்டு வரை, மூன்று கட்டமாக, 1.23 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.கடந்த 2019ம் ஆண்டு, இந்த நிதியில் இருந்து, திருச்சி மாவட்டத்தில் உள்ள ஐந்து அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கொப்பம்பட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளிக்கு தலா எட்டு லட்சம் ரூபாயில், மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழுவுக்கு விடுவிக்கப்பட்டது.அதுபோல, 2021ம் ஆண்டுகளில், 13 அரசு பள்ளிகளுக்கு தேவையான தளவாட பொருட்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு 62.23 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த முறைகேடு குறித்து கடந்த 5ம் தேதி, திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் விசாரணை நடத்தி, பள்ளிக்கல்வித் துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஒன்பது பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.திருச்சி மாவட்ட முன்னாள் முதன்மை கல்வி அதிகாரியாகவும், மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகவும் இருந்த அறிவழகன் உள்ளிட்ட ஒன்பது கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மீது, நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.