திருச்சி: திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை நகராட்சி, துவாக்குடி மூன்றாம்
நிலை நகராட்சிகளில் இரண்டு தலைவர்களும், 48 கவுன்சிலர்களும் தேர்வு
செய்யப்பட உள்ளனர். கூத்தப்பா, பொன்னம்பட்டி, சிறுகமணி ஆகிய மூன்று டவுன்
பஞ்சாயத்துகளில் மூன்று தலைவர்கள் 48 கவுன்சிலர்கள் முதல் கட்ட தேர்தல்
மூலம் தேர்தெடுக்கப்பட உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தல் அக்டோபர் 19ம் தேதி
நடக்கிறது. இதில் லால்குடி, மணச்சநல்லூர்,முசிறி, புள்ளம்பாடி,
தாத்தையங்கார் பேட்டை, தொட்டியம், துறையூர், உப்பிலியபுரம் உட்பட எட்டு
யூனியன்களில் 249 யூனியன் தலைவர்கள், 2,106 பஞ்சாயத்து உறுப்பினர்கள், 144
யூனியன் வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட அளவில் யூனியன் கவுன்சிலர் 14 பேர்
தேர்வு செய்யப்பட உள்ளனர். துறையூர் நகராட்சிக்கு தலைவர் ஒருவரும், 24
நகராட்சி கவுன்சிலர்களும் தேர்தெடுக்க உள்ளனர். பாலகிருஷ்ணம்பட்டி,
கல்லக்குடி, லால்குடி, மணச்சநல்லூர், மேட்டுப்பாளையம், முசிறி, பூவாளூர்,
புள்ளம்பாடி, எஸ்.கண்ணணூர், தாத்தையங்கார் பேட்டை, தொட்டியம்,
உப்பிலயபுரம், காட்டுப்புத்தூர் உட்பட 13 டவுன் பஞ்சாயத்துகளுக்கு 13
தலைவர்கள், 207 வார்டு கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். திருச்சி
மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கு இரண்டாம் நாளான நேற்று பஞ்சாயத்து
தலைவர்களுக்கு 40 பேரும், பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு 526 பேரும், மாவட்ட
யூனியன் கவுன்சிலர்கள் பதவிக்கு மூன்று பேரும், டவுன் பஞ்சாயத்து
கவுன்சிலர் மூன்று பேரும், நகராட்சி கவுன்சிலர் ஒருவர் உட்பட மொத்தம் 573
பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.