உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த வாலிபர் உயிருடன் மீட்பு

துறையூர்: துறையூர் அருகே கிணற்றுக்குள் இறங்கி வேலை செய்து கொண்டிருந்த வாலிபர் தவறி விழுந்தார். அவரை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மேலநடுவலூரை சேர்ந்தவர் சதீஸ்குமார்(24). இவருக்கு சொந்தமான 80 அடி ஆழ கிணற்றை சுத்தப்படுத்தும் பணிக்காக கயிறு கட்டி இறங்கியுள்ளார். கயிற்றில் தொங்கியபடி பணி செய்து கொண்டிருந்த போது தவறி கீழே விழுந்ததில் காலில் அடிபட்டு அலறினார். இதுகுறித்து கிணற்றுக்கு மேலே இருந்தவர்கள் துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தந்தனர். நிலைய அலுவலர் சின்னசாமி தலைமையில் சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி வாலிபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீயணைப்பு வீரர் சதீஷ் கயிறு மூலம் கிணற்றுக்குள் இழங்கி வாலிபரை மீட்டு கயிற்றில் முடிச்சு போட்டு பத்திரமாக மேலே தூக்கி விட்டார். மேலே இருந்த வீரர்கள் 108 ஆம்புலன்ஸூக்கு தகவல் தந்து வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் துணிச்சலாக செயல்பட்டு வாலிபரை மீட்டதற்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை