உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / தந்தை கண்டிப்பு மகன் தற்கொலை

தந்தை கண்டிப்பு மகன் தற்கொலை

திருச்சி: திருச்சி அருகே குடிப்பது குறித்து தந்தை கண்டித்ததால் வெறுப்படைந்த மகன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். திருச்சி அருகே திருவெறும்பூர் எழில்நகரைச் சேர்ந்தவர் அழகர். இவரது மகன் மணிகண்டன் (26). இருவரும் கொத்தனார். மணிகண்டன் வேலைக்கு செல்லாமல் சுற்றியதுடன், வேலை க்கு வாங்கும் சம்பளம் முழுவதையும் குடித்தை காலி செய்வது குறித்தும் அழகர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மணிகண்டன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அவரை அக்கம்பக்கத்தார் காப்பாற்றி திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று காலை மணிகண்டன் பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை குறித்து திருவெறும்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ