உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கஞ்சா வியாபாரி குண்டாஸில் கைது

கஞ்சா வியாபாரி குண்டாஸில் கைது

திருச்சி: திருச்சி மாநகரில் தொடர்ந்து கஞ்சா வழக்கில் கைதான பிரபல கஞ்சா வியாபாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து உத்தரவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் 'சம்சா' காமராஜ் என்கிற காமராஜ் (37). இவர் மீது தில்லைநகர், கண்டோன்மெண்ட், உறையூர் ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் கஞ்சா விற்றதாக நான்கு வழக்குகள் உள்ளது. ஆகையால், அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதன்பேரில் காமராஜ் குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை