உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / துறையூர் ஆறுநாட்டு வேளாளர் சங்க மண்டப திறப்பு விழா

துறையூர் ஆறுநாட்டு வேளாளர் சங்க மண்டப திறப்பு விழா

துறையூர்: துறையூர் ஆறுநாட்டு வேளாளர் சங்க திருமண மண்டப திறப்பு விழா தலைவர் வையாபுரி பிள்ளை தலைமையில் நடந்தது. விழாவில் திலகம் செல்வராஜ், ராஜேஸ்வரி மணி, நிர்மலா ஆறுமுகம், டாக்டர் லட்சுமி, சாந்தி கிருஷ்ணமூர்த்தி குத்துவிளக்கேற்றினர். திருவானைக்கோவில், சென்னை சங்க செயலர்கள் கருப்பையா, தொழிலதிபர்கள் கிருஷ்ணமூர்த்தி, புரவி முன்னிலை வகித்தனர். சங்க செயலர் செல்வராஜ் வரவேற்றார். சென்னை கோல்டன் டெக்ஸ் அதிபர் மணிப்பிள்ளை மண்டபத்தை திறந்துவைத்தார். திருவானைக்கோவில் சங்க துணைத்தலைவர் ரவிச்சந்திரன், முன்னாள் செயலர் தீனதயாளன், சென்னை, மதுரை சங்க தலைவர்கள் நடராஜன், சுப்ரமணியன், சுப்பையா வாழ்த்தி பேசினர். மண்டபத்தில் உணவுக்கூடத்தை துறையூர் யூனியன் தலைவர் ராஜேந்திரன், திருமண அரங்கத்தை வாசன் ஹெல்த் கேர் குழும சேர்மன் டாக்டர் அருண், தங்கும் அறைகளை ஜெயராம் இன்ஜினியரிங் கல்லூரி சேர்மன் சுப்ரமணியம் திறந்து வைத்தார். விழாவில், சமூக மக்களும், உள்ளூர் பிரமுகர்களும் திரளாக பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள், கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை