உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அரசு ஏசி பஸ்சில் திடீர் புகை பயணியரை பாதுகாத்த டிரைவர்

அரசு ஏசி பஸ்சில் திடீர் புகை பயணியரை பாதுகாத்த டிரைவர்

திருச்சி: அரசு பஸ்சில் திடீர் புகை கிளம்பியதால், டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி, பயணியரை பாதுகாப்பாக இறக்கி விட்டார். கோவையில் இருந்து திருச்சி வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக 'ஏசி' பஸ், நேற்று பகல் 11:30 மணிக்கு சத்திரம் பஸ் ஸ்டாண்டில் பயணியரை இறக்கிவிட்டு, 28 பேருடன் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பஸ் முனையத்துக்கு சென்று கொண்டிருந்தது. நீதிமன்ற சாலையில் சென்ற போது, பஸ்சின் கீழ் பகுதியில் இருந்து புகை கிளம்பியது. இதனால், பயணியர் பதற்றமாகினர். உடனே, டிரைவர் ரவிச்சந்திரன் பஸ்சை நிறுத்தி, பயணியரை பத்திரமாக இறக்கி விட்டார். தொடர்ந்து, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், கன்டோன்மென்ட் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, போக்குவரத்து கழக பணியாளர்கள் உதவியுடன் தீயை அணைத்தனர். பயணியர் அனைவரும் மாற்று பஸ்சில் பஞ்சப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பஸ் பின் சக்கரத்தின் டயர்கள் ஒன்றோடு ஒன்று உராய்ந்ததால், புகை கிளம்பியது என போக்குவரத்து ஊழியர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி