உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / துறையூர் நகராட்சி அலுவலகம் பழைய கட்டடத்தில் தீ

துறையூர் நகராட்சி அலுவலகம் பழைய கட்டடத்தில் தீ

திருச்சி:திருச்சி மாவட்டம், துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே, நகராட்சிக்கு சொந்தமான பழைய கட்டடம் உள்ளது.இது, 2015 முதல் காலியாக உள்ளதால், நகராட்சி சுகாதார பிரிவில் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் மற்றும் உபயோகமற்ற பொருட்கள் அங்கு வைக்கப்பட்டிருந்தன. நகராட்சிக்கு சொந்தமான வாகனங்களும் கட்டட வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு பழைய அலுவலக கட்டடத்தில் உள்ள அலுவலக அறையில், மின்கசிவால் தீப்பிடித்தது. துறையூர் தீயணைப்பு வீரர்கள், இரவு 10:00 மணி வரை போராடி தீயை அணைத்தனர்.தீ விபத்தில், நகராட்சி சுகாதார பிரிவினர் வைத்திருந்த அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை