உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அரசு பஸ்களில் ஜி.பி.எஸ்., தமிழகம் முழுதும் விரிவாக்கம்

அரசு பஸ்களில் ஜி.பி.எஸ்., தமிழகம் முழுதும் விரிவாக்கம்

திருச்சி: தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:கேரளாவில் வைக்கம் நுாற்றாண்டு விழா நடைபெற்றது. விழா நினைவாக, வைக்கத்தில் இருந்து சென்னைக்கு நேரடி பஸ் இயக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் படி, சென்னையில் இருந்து வைக்கத்திற்கு இரு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. கடந்த பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அரசு தரப்பில், தனியார் பஸ்களை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி, இதற்கு தீர்வு காணப்பட்டது. தமிழக அரசு பஸ்களில் ஜி.பி.எஸ்., பொருத்தும் பணி, முதல் கட்டமாக சென்னையில் நடைமுறைக்கு வந்துள்ளது. தமிழகம் முழுதும் இத்திட் டம் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை