உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / புளியஞ்சோலையில் இன்றுஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை

புளியஞ்சோலையில் இன்றுஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை

துறையூர்: துறையூர் அருகே புளியஞ்சோலையில் இன்று ஆடிப்பெருக்கு முன்னிட்டு சிறப்பு பூஜை, அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் ஆடி 18ம் நாளான இன்று ஆறு உள்ளிட்ட புனித நிலத்தில் மக்கள் நீராடி வழிபடுவர். திருமணமாகி முதல் ஆடி எனும் தலை ஆடியை எதிர்கொள்ளும் மணமக்களுக்கு இந்நாள் முக்கியத்துவம் வாய்ந்தது.இந்நாளில் தாலி பிரித்து கட்டும் நிகழ்வும், குல தெய்வ வழிபாடும் நடைபெறும். சித்தர்கள் வாழும், மூலிகை நிறைந்த கொல்லிமலையில் உற்பத்தியாகி திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை என்னுமிடத்தில் அய்யாறு ஓடையில் புனித நீராடி வழிபடுவது துறையூர் பகுதி மக்களின் வழக்கமாகும்.அடிவாரத்திலிருந்து மலைப்பாதை வழியாக நடந்து சென்று மலை மீதுள்ள பெரியசாமி, பெரியண்ணன், காமாட்சி அம்மன், சித்தர்களை வழிபட்டு திரும்புவர், புளி மூட்டை மகான் சுவாமிகளை வழிபடும் பக்தர்கள் இன்று காலை முதல் சித்தர்கள், லட்சுமி வேள்வி, சிறப்பு பூஜை, சங்கு பூஜை செய்து அன்னதானம் வழங்க விரிவான ஏற்பாடு செய்துள்ளனர்.துறையூரிலிருந்து புளியஞ்சோலை அரசு சிறப்பு பஸ் வசதி உள்ளது. உப்பிலியபுரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !