வீடு தோறும் மகரஜோதி ஐயப்ப பக்தர்களுக்கு அழைப்பு
திருச்சி : மகர ஜோதியன்று வீடுகள், பொது இடங்களில் விளக்கேற்ற சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.சமாஜத்தின் மாநில தலைவர் பிரபாகரன், பொதுச்செயலாளர் ராஜன் வெளியிட்டுள்ள கூட்டறிக்கை: சபரிமலையில் ஜன., 14 மகரஜோதி விழா நடக்கிறது. அன்று மகரஜோதியை வரவேற்கும் வகையில், வீடு தோறும் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.மகர சங்கராந்தி தினத்தில் சூரிய பகவானையும், மகரஜோதியையும் ஒன்றுபடும் நேரமான மாலை 6:30 முதல் இரவு 7:15 மணி வரை உலக மக்கள் அனைத்து வளங்களையும் பெற வேண்டும் என்ற வேண்டுதலுடன் குறைந்தது 18 விளக்குகள் ஏற்றிட வேண்டும். அனைத்து வீடுகள், கோயில்கள், முக்கிய சந்திப்புகளில் ஐயப்ப பக்தர்களும், பொதுமக்களும் விளக்குகள் ஏற்றிடலாம். இவ்வாறு கூறியுள்ளனர்.