உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / நண்பர்களை காப்பாற்ற முயன்றவர் மூழ்கி பலி

நண்பர்களை காப்பாற்ற முயன்றவர் மூழ்கி பலி

திருச்சி:Lதிருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுவயலுாரைச் சேர்ந்த சிவசக்தி, 22, அதே பகுதியில் உள்ள பெரிய ஏரியில் நேற்று முன்தினம் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்தார். அவருடன் குளித்த இருவர் நீரில் மூழ்கியதை பார்த்த சிவசக்தி, இருவரையும் காப்பாற்ற முயன்றார். அவர்களை கரையில் ஏற்றிவிட்ட சிவசக்தி, மீண்டும் கரைக்கு வர முடியாமல், நீரில் மூழ்கினார்.கரையில் இருந்தவர்கள் அவர் நீரில் மூழ்கியதை பார்த்து சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் ஏரியில் இறங்கி தேடியும், இரவு வரை அவரை மீட்க முடியவில்லை. அதனால், நேற்று, தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்த காணக்கிளியநல்லுார் தீயணைப்பு படையினர், நேற்று பெரிய ஏரிக்கு சென்று, நீரில் மூழ்கி இறந்த சிவசக்தி உடலை மீட்டனர். ஏரி நீரில் மூழ்கி தத்தளித்தவர்களை மீட்ட வாலிபர், அதே ஏரியில் மூழ்கி இறந்தது, சிறுவயலுார் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை