உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கோவிலுக்கு அலகு குத்தியவர் டாஸ்மாக் அருகே மர்ம சாவு

கோவிலுக்கு அலகு குத்தியவர் டாஸ்மாக் அருகே மர்ம சாவு

திருச்சி; சமயபுரம் கோவிலுக்கு அலகு குத்தி வந்த தொழிலாளி, வழியில் 'டாஸ்மாக்' கடை அருகே இறந்து கிடந்தார்.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லுார் அருகே உள்ள சனமங்கலத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர் 24; கூலி தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் அதிகாலை தன் மனைவி பரிமளா மற்றும் கிராமத்தினருடன், வாயில் அலகு குத்தி சமயபுரம் கோவிலுக்கு வந்தார். சுவாமி கும்பிட்டு விட்டு, அனைவரும் ஊர் திரும்ப, சமயபுரம் சாலைக்கு வந்துள்ளனர்.அப்போது, சாப்பிட்டு விட்டு வருவதாக கூறிச் சென்ற சந்திரசேகரை காணவில்லை. குடும்பத்தினர் தேடியபோது, அவர் சமயபுரத்தில் டாஸ்மாக் கடை அருகே சுயநினைவு இல்லாமல் இருந்துள்ளார். மண்ணச்சநல்லுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.டாஸ்மாக் அருகே போலி மதுபானம் வாங்கி குடித்து இறந்திருக்கலாம் என, அப்பகுதியினர் தெரிவித்தனர். சமயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ