உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மகன் கண் முன் தாய் பரிதாப பலி

மகன் கண் முன் தாய் பரிதாப பலி

திருச்சி:திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அருகே அதவத்துார் பகுதியை சேர்ந்தவர் கண்ணம்மாள், 80. இவரது மகன் கோவிந்தராஜ், திருச்சி கலெக்டர் அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று காலை கண்ணம்மாள், அவரது மகன் டூ - -வீலரில் சத்திரம் நோக்கி சென்றனர். பகல், 11:30 மணிக்கு, மேலப்புதுார் சாலையில் சென்ற போது, ஜங்ஷனில் இருந்து சத்திரம் பஸ் ஸ்டாண்ட் சென்ற தனியார் பஸ் திடீரென டூ- - வீலர் பின்பக்கம் மோதியது.இதில், கோவிந்தராஜ்,கண்ணம்மா நிலைத்தடுமாறி சாலையில் விழுந்ததில், பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய கண்ணம்மாள் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை