மேலும் செய்திகள்
வழக்கு வாகனங்கள் மண்ணோடு மண்ணாகும் அவலம்
24-May-2025
திருச்சி : ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக பகுதியை சேர்ந்தவர் ஷியாம் ஜெதரா, 25. இவர், சில நாட்களாக திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள அலீப் டீக்கடையில் டீ குடிக்க வந்துள்ளார். அங்கு வேலை பார்க்கும் தவுபிக் உட்பட சிலரிடம் பழகி, தான் காவல்துறையில் வேலை பார்ப்பதாகவும், அங்கு ஏலம் விடும் வாகனங்களை, குறைந்த விலைக்கு வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார்.நம்பிய தவுபிக், அவரது நண்பர்கள், வாகனங்கள் வாங்க, 1.20 லட்சம் ரூபாயை, ஷியாம் ஜெதராவிடம் கொடுத்துள்ளனர். அவர் கூறியபடி, வாகனங்களை வாங்கித்தரவில்லை. இதுகுறித்து, தவுபிக், நண்பர்கள், திருச்சி அரசு மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, ஷியாம் ஜெதராவை கைது செய்தனர்.
24-May-2025