உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / காதல் ஜோடியை தாக்கிய நா.த.க., நிர்வாகி, மூவர் கைது

காதல் ஜோடியை தாக்கிய நா.த.க., நிர்வாகி, மூவர் கைது

சொரியம்பட்டி:திருச்சி மாவட்டம், சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ், 20, கல்லுாரி மாணவரான இவர், அதே பகுதியைச் சேர்ந்த, 22 வயது கல்லுாரி மாணவியை காதலித்ததாகக் கூறப்படுகிறது. 14ல் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, மதுரை அருகே இலுப்பைகுளம் என்ற இடத்தில் தங்கி இருந்தனர்.இதையறிந்த மாணவியின் வீட்டார், அதே பகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் என்ற கட்சியை சேர்ந்த அருணகிரி, 37, என்பவருடன் மூவரை அனுப்பி, இருவரையும் அழைத்துவரச் செய்தனர். நால்வரும் இலுப்பைகுளம் சென்று, காதல் ஜோடியை காரில் ஏற்றி வந்தனர்.வரும் வழியில், இருவரையும் தாக்கி, துவரங்குறிச்சி அருகே சந்தோசை இறக்கிவிட்ட அந்த கும்பல், பெண்ணை கூட்டிச் சென்று அவரது வீட்டில் விட்டது. தாக்குதலில் படுகாயம் அடைந்த சந்தோஷ் அளித்த புகாரில், அருணகிரி, சொரியம்பட்டியைச் சேர்ந்த மூவரை துவரங்குறிச்சி போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை