உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பாதை தகராறில் ஒருவர் கொலை மூவர் கைது; ஏழு பேருக்கு வலை

பாதை தகராறில் ஒருவர் கொலை மூவர் கைது; ஏழு பேருக்கு வலை

திருச்சி: திருச்சியில் பொதுவழியை பயன்படுத்துவதில் ஏற்பட்ட தகராறில், ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். திருச்சி மாவட்டம், மேல பஞ்சப்பூரை சேர்ந்தவர் ராசு, 65. இவரது மகன்கள் ஜெயபால், கார்த்திக், 32; மாடு மேய்ப்பவர்கள். இவர்களுக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், 39, அஞ்சலை, 45, ராமமூர்த்தி, 26, ஆகியோர் குடும்பத்துக்கும், பொதுப்பாதையை பயன்படுத்துவதில் தகராறு இருந்தது. ஆக., 29ம் தேதி மாடுகளுக்கு தண்ணீர் வைக்க சென்ற ராசு, அவரது மகன்களை, ராஜேந்திரன் உள்ளிட்ட மூவர் வழிமறித்து தாக்கி, அரிவாளால் வெட்டினர். மூவரும் படுகாயமடைந்த நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ராசு சிகிச்சைபலனின்றி இறந்தார். இதையடுத்து, 10 பேர் மீது எடமலைப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, ராஜேந்திரன், அஞ்சலை, ராமமூர்த்தி, ஆகிய மூவரை கைது செய்தனர். தலைமறைவான ஏழு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ