பெற்றோர் சண்டை: விரக்தியில் மாணவி துாக்கிட்டு தற்கொலை
திருச்சி:திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே எஸ்.கண்ணணுாரைச் சேர்ந்தவர் மதியழகன். இவரது மனைவி சுமதி. தம்பதியின் மகள் கவுசிகா, 11. இவர் அதே பகுதி அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.தம்பதி, அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். இதனால், மகள் மனமுடைந்து போனார். நேற்று முன்தினம் காலையும், தம்பதியிடையே தகராறு ஏற்பட்டது. இதை பார்த்து விட்டு பள்ளி சென்ற கவுசிகா, மாலை வீட்டுக்கு வந்தபோது, பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். தனியாக இருந்த இவர், தன் தாயின் சேலையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சமயபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.