உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மாவட்ட கல்வி அலுவலகம் முன் போராட்டம் நடத்தியோர் கைது

மாவட்ட கல்வி அலுவலகம் முன் போராட்டம் நடத்தியோர் கைது

திருச்சி:திருச்சி மாவட்டம், லால்குடி, அரசு பள்ளி மாணவனுக்கு வழங்கிய நன்னடத்தை சான்றிதழில், திருத்தம் செய்யக்கோரி, நேற்று முன்தினம் மாலை, இந்திய மாணவர் சங்கத்தினர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்திக்கச் சென்றனர். கல்வி அலுவலரை சந்திக்க அனுமதிக்காததால், 'கல்வி அலுவலரை காணவில்லை' என்று எழுதிய பதாகையுடன் முற்றுகை போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மாணவர் சங்கத்தினர் மது போதையில் வந்து, போராட்டம் நடத்தியதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, காந்தி மார்க்கெட் போலீசில் புகார் செய்தார்.அதன்படி, வழக்கு பதிந்த போலீசார், நேற்று, மாணவர் சங்கத்தினர் ஒன்பது பேரை கைது செய்தனர். இதனை கண்டித்து, நேற்று மாலையில், மீண்டும் போராட்டம் நடத்திய மாணவர் சங்கத்தினர், 30க்கும் மேற்பட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை