உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி /  அரியவகை ஆமை குஞ்சுகள் பறிமுதல்

 அரியவகை ஆமை குஞ்சுகள் பறிமுதல்

திருச்சி: கடத்தி வரப்பட்ட, அரியவகை ஆமை குஞ்சுகளை, திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சிங்கப்பூரில் இருந்து நேற்று முன்தினம், 'ஸ்கூட்' விமானத்தில் திருச்சி வந்த பயணியரை, விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஒரு பயணியின் உடைமையில், 2,400க்கும் மேற்பட்ட அரியவகை ஆமைக்குஞ்சுகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடத்தி வந்தவரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ