உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

திருச்சி:பாங்காக்கில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்ரக கஞ்சா, திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக, ஸ்கூட் விமானத்தில் நேற்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த பயணியரை, கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நடந்து சென்ற ஆண் பயணியை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர். அந்நபர், 3 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற உயர்ரக கஞ்சாவை, தன் உடைமைக்குள் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு மூன்று கோடி ரூபாய். அவற்றை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்து, அந்நபரை கைது செய்தனர். அண்மைக்காலமாக திருச்சி விமான நிலையம் வழியாக ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வருவது அதிகரித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை