உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / ஷார்ஜா ரிட்டன் வாலிபருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி

ஷார்ஜா ரிட்டன் வாலிபருக்கு குரங்கம்மை நோய் அறிகுறி

திருச்சி:ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து நேற்று அதிகாலை விமானத்தில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணியரை, சுகாதாரத்துறையினர் பரிசோதித்தனர். அப்போது ஷார்ஜாவில் இருந்து வந்த, 28 வயதான திருவாரூர் வாலிபருக்கு குரங்கம்மை நோய் அறிகுறிகளான காய்ச்சல், கொப்புளம், சோர்வு ஆகியவை இருந்துள்ளது. அவரை உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறையினர் சேர்த்தனர். அவரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, குரங்கம்மை நோய் உள்ளதா என்பதைக் கண்டறிய, சென்னைக்கு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை