உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / கோவிலை விட்டு அரசு விலக துறவியர் பேரவை தீர்மானம்

கோவிலை விட்டு அரசு விலக துறவியர் பேரவை தீர்மானம்

திருச்சி:திருச்சி, ஸ்ரீரங்கம் ராகவேந்திரா மடத்தில், விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அறவழி காட்டும் ஆன்றோர் பேரவைக் கூட்டம் நடந்தது. விஷ்வ ஹிந்து பரிசத் தேசிய தலைவர் அலோக்குமார் ஜி தலைமை வகித்தார். கூட்டத்தில் வட மற்றும் தென் தமிழகத்தைச் சேர்ந்த, 40 மடாதிபதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கோவில்களின் தல வரலாறுகளை திருத்தி, மாற்றி எழுத அறநிலையத்துறை முயற்சிப்பதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. அதை உடனே நிறுத்த வேண்டும்.தமிழகத்தின், 40,000த்துக்கும் மேற்பட்ட கோவில்களில் நிர்வாகம் பாழ்பட்டு கிடப்பதால், கோவில்களை விட்டு, தமிழக அரசு வெளியேற வேண்டும். அவற்றை அறிவுசார்ந்த, பக்திமிக்க பிரமுகர்களை உறுப்பினர்களாக கொண்ட வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். உரிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்து, வக்புபோர்டு ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க வேண்டும். இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி