இறுதி சடங்கின் போது கண் விழித்த மூதாட்டி
திருச்சி: திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அடுத்த வேலக்குறிச்சி எஸ்.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த பம்பையின் மனைவி சின்னம்மாள்,- 60. சில நாட்களுக்கு முன் பூச்சிக்கொல்லி மருந்து குடித்ததால், ஆபத்தான நிலையில் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் இறக்கும் தருவாயில் இருந்ததால், உறவினர்கள் வீட்டுக்கு கொண்டு சென்றனர். பின்னர், மூதாட்டி இறந்ததாக கருதி, அடக்கம் செய்ய மயானத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு இறுதி சடங்குகள் செய்த போது, அவர் திடீரென கண் விழித்துள்ளார். உடனடியாக, உறவினர்கள், அவரை தனியார் ஆம்புலன்சில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.