உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / இதுதான் கடைசி வாய்ப்பு: சீமானுக்கு கோர்ட் கெடு

இதுதான் கடைசி வாய்ப்பு: சீமானுக்கு கோர்ட் கெடு

திருச்சி : திருச்சி எஸ்.பி.,யாக இருந்த வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் குறித்து சமூக வலைதளங்களில், நாம் தமிழர் கட்சியினர் அவதுாறு பரப்பினர். இதற்கு அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்தான் காரணம் என குற்றஞ்சாட்டி, வருண்குமார் போலீசில் புகார் அளித்தார். மேலும், டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்ற அவர், தன் மீதும், தன் குடும்பத்தார் மீதும் அவதுாறு பரப்பிய சீமான் மீது நடவடிக்கை எடுக்கவும், நஷ்டஈடு கோரியும், திருச்சி, 4வது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுப்பதில் தனக்கு ஆட்சேபனை இருப்பதாக, சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கான விளக்கத்தை அளிக்க, இரு தரப்பினருக்கும் நேற்று வாய்தா போடப்பட்டிருந்தது. வருண்குமார் ஆஜராகி, தன் வக்கீல் முரளி கிருஷ்ணன் வாயிலாக விளக்கம் அளித்தார். சீமான் நேற்று நீதிமன்றம் வரவில்லை. அவருக்கு வேறு அலுவல் இருப்பதாக, அவர் தரப்பு வக்கீல், நீதிபதி விஜயாவிடம் கூறினார். சீமான் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை ஏற்ற நீதிபதி விஜயா, 'வழக்கின் விசாரணை, மே 21ம் தேதி ஒத்தி வைக்கப்படுகிறது. இதுவே அவருக்கு இறுதி வாய்ப்பு' என, உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !