உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ராணுவ வீரர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ராணுவ வீரர் பலி

துறையூர்: துறையூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி டூவீலரில் சென்ற ராணுவ வீரர் பரிதாபமாக பலியானார். துறையூர் அருகே மேலகுன்னுப்பட்டியை சேர்ந்த வடிவேல் மகன் லோகநாதன்(47). இவர் ராணுவத்தில் அசாம் ரெஜிமென்ட் ஜெனரல் ரிசர்வ் இன்ஜினியரிங் போர்ஸில் பணிபுரிந்து வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த இவர், முசிறி மலையப்பபுரத்தில் வசித்தார். நேற்று முன்தினம் மேலகுன்னுப்பட்டியிலுள்ள உடல் நலக்குறைவாக உள்ள அண்ணனை பார்க்க சென்ற லோகநாதன், இரவு ஒன்பது மணியளவில் தனது கவாஸ்கி காலிபர் டூவீலரில் முசிறியில் உள்ள வீட்டுக்குச் சென்றுள்ளார். கண்ணனூர் வடக்கு வெளியிலுள்ள வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே சென்றபோது இவர் மீது மோதிய அடையாளம் தெரியாத வாகனம் நிற்காமல் சென்று விட்டது. தூக்கி வீசப்பட்ட லோகநாதன் சம்பவ இடத்திலேயே பலியானார். லோகநாதன் உடலை கைப்பற்றிய புலிவலம் போலீஸார், பிரேத பரிசோதனைக்கு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்துக்கு காரணமான வாகனத்தை போலீஸார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி