உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / புத்தாண்டில் சோகம்: வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

புத்தாண்டில் சோகம்: வீட்டின் மேற்கூரை இடிந்து ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருச்சி: திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உட்பட 4 பெண்கள் வீட்டு மேற்கூரை இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர்.திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் காந்தி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது தாய் சாந்தி (70), மனைவி விஜயலட்சுமி (38), குழந்தைகள் பிரதீபா (12), ஹரிணி (10) என ஐந்து பேர் வசித்து வந்தனர். இந்நிலையில் மாரிமுத்துவின் தங்கை கணவர் சென்னையில் இறந்து விட்டதால் அந்த துக்க நிகழ்ச்சிக்காக மாரிமுத்து நேற்று (டிச.,31) சென்னைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் வழக்கம்போல் உறங்கி உள்ளனர். 1972ம் ஆண்டு கட்டப்பட்ட அவர்களது வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதனால் சாந்தி, விஜயலட்சுமி, பிரதீபா, ஹரிணி ஆகிய நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதையடுத்து, அரியமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருவானந்தம் தலைமையிலான போலீசார் மற்றும் திருச்சி தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். புத்தாண்டு தினத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சிறுமிகள் உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

D.Ambujavalli
ஜன 02, 2024 06:50

ஐம்பது வருஷத்துக்குமுன் கட்டிய மேஸ்திரியும், இன்ஜினீயரும் இருக்கிறார்களோ இல்லையோ? யாரைப்பிடிப்பது விசாரிப்பது ?


Mohan
ஜன 01, 2024 20:09

கணவரின் தங்கை கணவர் இறப்பிற்கு நீங்க அனைவரும் சென்றிருந்தால் பிழைத்திருக்கலாம். இவர்கள் போகாத காரணம் நாத்தி சண்டையா இருந்திருக்கும். அன்போடு இருந்தால் நீண்டாண்டு வாழலாம்.


Radhakrishnan Seetharaman
ஜன 02, 2024 17:54

சக மனிதர்கள் மேல் உண்மையான அன்பிருந்தால், இது போன்ற கருத்துப் போடத் தோணாது. அப்படியே சகுந்தலா கோபிநாத் போலவே எழுதுகிறீர்.


raja
ஜன 01, 2024 19:29

அய்ம்பது வருட கட்டிடம் .... ஜாக்கிரதையாய் இருந்திருக்க வேண்டும்..


duruvasar
ஜன 01, 2024 17:59

என்ன விபரீதம் இது. நெஞ்சம் பதைப்பதற்கிறது இப்படி மலர வேண்டிய மொட்டுக்கள் கருகிப்போனதை பார்க்க .பரிதாபமாக இருக்கிறது. இறைவனின் கணக்கை புரிந்துகொள்வது கடினம்.


Anantharaman Srinivasan
ஜன 01, 2024 14:03

அரசு காண்ட்ராக்டர் கட்டின வீடாயிருக்கும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 01, 2024 13:01

சீலிங் கான்கிரீட் சப்போர்ட் பீம் போடாமல் அல்லது குறுக்கு சுவர் சப்போர்ட் இல்லாமல் இருந்திருக்கும். மழை காலத்தில் சீலிங் தளம் ஈறித்து வெயிட் கூடியதால் கனம் தாங்காமல் விழுந்திருக்க வாய்ப்பு அதிகம். கட்டிய என்ஜினீயர் அல்லது மேஸ்திரியை பிடித்து உள்ளே வைக்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை