உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மாணவன் கடத்தல் திருநங்கை "எஸ்கேப்

மாணவன் கடத்தல் திருநங்கை "எஸ்கேப்

தொட்டியம்: திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அடுத்த ஆலம்பாளையம்புதூரை சேர்ந்தவர் முருகேசன் விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகன் சவுந்தர்சீலன்(16) காட்டுப்புத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளி சென்ற சவுந்தர்சீலன் மாலை வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாய் பக்கத்து வீட்டை சேர்ந்த திருநங்கை ஆர்த்தி (எ) சுப்பிரமணி மும்பை கடத்திச் சென்று விட்டதாக காட்டுப்புத்தூர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில், காட்டுப்புத்தூர் போலீஸ் எஸ்.ஐ., சண்முகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ