உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / மண்ணெண்ணை ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி

மண்ணெண்ணை ஸ்டவ் வெடித்து இளம்பெண் பலி

முசிறி: முசிறி அடுத்த பழம்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவராஜ். இவரது மனைவி லதா(29). சம்பவத்தன்று காலை லதா தனது வீட்டில் மண்ணெண்ணெய் அடுப்பை பற்ற வைத்து கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக அடுப்பு வெடித்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த லதா திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா சிகிச்சை பலனின்றி பலியானார். சம்பவம் குறித்து லதாவின் தந்தை துரைசாமி கொடுத்த புகாரின் பேரில் முசிறி போலீஸ் எஸ்.ஐ., கலாவதி வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ