| ADDED : ஜூலை 29, 2011 11:42 PM
திருச்சி: திருச்சியில் இன்று (30ம் தேதி) நடக்கும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், 21 ஆயிரத்து 516 பேர்கள் பங்கேற்கின்றனர்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி) மூலம் குரூப்- 2 பணிகளுக்கான தேர்வு இன்று (30ம் தேதி) நடக்கிறது. திருச்சி மாவட்டத்தில் நான்கு மையங்களில் 77 அறைகளில் நடக்கும் தேர்வில் மொத்தம் 21 ஆயிரத்து 516 பேர்கள் தேர்வு எழுதுகின்றனர்.திருச்சியில் 16 ஆயிரத்து 348 பேர், மணப்பாறையில் 1,208 பேர், முசிறியில் 2,162 பேர், துறையூரில் 1,798 பேர் தேர்வெழுதுகின்றனர். மொத்தம் 40 கல்வி நிறுவனங்களில் தேர்வு நடக்கிறது.திருச்சி கலெக்டர் அலுவலகத்தில், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று டி.ஆர்.ஓ., பேச்சியம்மாள் தலைமையில் நடந்தது. டி.என்.பி.எஸ்.சி., தேர்வாணைய உறுப்பினர் டாக்டர் பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார்.அரசு சார்பு செயலாளர் நாரயணசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் (பொது) பாலசுப்ரமணியம், (கணக்குகள்) செல்வராணி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் முருகையன், ஆர்.டி.ஓ., சங்கீதா, போலீஸ் ஏ.சி.,க்கள், அனைத்து தாசில்தார்கள், 77 தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.