உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / களிமண் விநாயகர் சிலை போலீஸ் கமிஷனர் கறார்

களிமண் விநாயகர் சிலை போலீஸ் கமிஷனர் கறார்

திருச்சி: 'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் முற்றிலும் களிமண்ணால் செய்தே பயன்படுத்த வேண்டும்' என்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் மாசானமுத்து உத்தரவிட்டுள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: உயர்நீதிமன்ற உத்தரவின்படி, வருகிற விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்படும் விநாயகர் சிலைகள் முற்றிலும் களிமண்ணால் செய்தே பயன்படுத்த வேண்டும். ரசாயனம் கலந்த வர்ணம் பூசிய அச்சுக்களை பயன்படுத்தக்கூடாது. இயற்கையான அச்சுக்கள் மற்றும் வர்ணங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிகாட்டுதல்படி இல்லாத விநாயகர் சிலை திருச்சி மாநகர எல்லைக்குள் வைக்க அனுமதி வழங்கப்படாது என பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* உறுதிமொழி: திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் கமிஷனர் மாசானமுத்து தலைமையில் போலீஸ் துணை கமிஷனர் மற்றும் போலீஸ் துறை அதிகாரிகள் அமைச்சுப்பணியாளர்கள் ராஜீவ் பிறந்த நாளை முன்னிட்டு மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ