உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / துவரங்குறிச்சியில் கம்யூ., ஆர்ப்பாட்டம்

துவரங்குறிச்சியில் கம்யூ., ஆர்ப்பாட்டம்

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி பஸ் ஸ்டாண்டு முன் மருங்காபுரி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், வலுவான லோக்பால் மசோதவை வலியுறுத்தி டில்லியில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற சமூக சேவகர் அன்னாஹஸாரேவை போலீஸார் கைது செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மருங்காபுரி ஒன்றிய பொருளாளர் பாலு தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய செயலாளர் வீரம ணி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சுப்பிரமணியம், ஒன்றியக்கு ழு உறுப்பினர் பால்ராஜ், தவசி, சேவியர் உட்ப ட ஏராளமான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் பங்கேற்று பேசினர். தவசிவேல் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி