உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சியில் அனைத்துவார்டுகளிலும் போட்டிம.தி.மு.க., தீர்மானம்

திருச்சியில் அனைத்துவார்டுகளிலும் போட்டிம.தி.மு.க., தீர்மானம்

திருச்சி: திருச்சி மாநகர் மாவட்ட ம.தி.மு.க., செயற்குழு கூட்டம் பாலக்கரை சந்தனமஹாலில் நடந்தது. அவைத் தலைவர் துரையரசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மலர்மன்னன், அமைப்புச்செயலாளர் கண்ணையன், மாவட்ட பொருளாளர் புலவர் தியாகராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், ''நடைபெற உள்ள உள்ளாட்சித்தேர்தலில் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் ம.தி.மு.க., சார்பில் வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிட செய்வது. ''நெல்லையில் நடைபெறும் அண்ணாதுரை பிறந்தநாள் திறந்த வெளி மாநாட்டில் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் 100 வாகனங்களில் கட்சி நிர்வாகிகள் சென்று கலந்து கொள்வது,'' என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை