உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / வெடிவிபத்து உயிரிழப்பு மூன்றாக அதிகரிப்பு

வெடிவிபத்து உயிரிழப்பு மூன்றாக அதிகரிப்பு

திருச்சி: திருச்சி அருகே லால்குடியில் விபத்தில் சிக்கிய சின்னாபின்னமான வெடி தொழிற்சாலைக்கு அனுமதி வேறொரு இடத்தில் வாங்கியிருப்பது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வெடி விபத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.திருச்சி மாவட்டம் லால்குடி சந்தைப்பேட்டை அருகேயுள்ள உமர்நகரில் குத்புதின் என்பவருக்கு சொந்தமான வெடிதயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. அங்கு நேற்று முன்தினம் மாலை வெடி தயாரிக்க கொண்டு வரப்பட்ட மூலப்பொருளான கந்தகத்தால் ஏற்பட்ட வெடிவிபத்தில், குத்புதின், வேன் டிரைவர் கண்ணன், செந்தில்குமார், சங்கர் ஆகிய நால்வரும் காயமடைந்தனர். உடனடியாக நால்வரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு நேற்று முன்தினம் இரவு எட்டு மணியளவில் குத்புதின், வேன் டிரைவர் கண்ணன் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.செந்தில்குமார் மற்றும் சங்கர் ஆகிய இருவரும் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்து லால்குடி போலீஸாரும், ஆர்.டி.ஓ., சம்பத் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், குத்புதின் வெடிதயாரிக்கும் தொழிற்சாலை நடத்த திருமங்கலம் ரோடு, சிறுதையூர் என்ற இடத்தில் அரசிடம் அனுமதி வாங்கிவிட்டு, லால்குடி சந்தைப்பேட்டை உமர்நகரில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.வெடிதயாரிக்கும் தொழிற்சாலை குறித்து திருச்சி டி.ஐ.ஜி., அமல்ராஜவிடம் கேட்டபோது, ''அனுமதி ஓரிடத்தில் வாங்கிவிட்டு, வேறொரு இடத்தில் வெடி தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தியுள்ளார். உரிமையாளர் குத்புதின் விபத்தில் இறந்து விட்டதால், விசாரணை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும், வெடிவிபத்தை நேரில் பார்த்த சாட்சிகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், வெடி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறோம். இது விபத்துத்தான்,'' என்று கூறினார்.* திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெடிதயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைபார்த்த செந்தில்குமாரும் (30) நேற்று மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி