உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / திருச்சி அருகே கோர விபத்துபலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

திருச்சி அருகே கோர விபத்துபலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு

துவரங்குறிச்சி: துவரங்குறிச்சி அருகே ஆம்னி பஸ்-அரசு பஸ் மோதிக்கொண்ட கோரவிபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.திருச்சி- மதுரை பைபாஸ் ரோட்டில் துவரங்குறிச்சி அருகே லஞ்சமேடு கைகாட்டி என்ற இடத்தின் கடந்த ஐந்தாம் தேதி ஆம்னி பஸ்ஸூம், அரசு பஸ்ஸூம் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. இதில், மூன்று குழந்தைகள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாயினர்.விபத்தில், 35க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சி, மணப்பாறை அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.நேற்று முன்தினம் திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற் தொட்டியப்பட்டியைச் சேர்ந்த நாகலட்சுமி (35) பரிதாபமாக உயிரிழந்தார்.இந்நிலையில், திருச்சி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தொட்டியப்பட்டி அழகர் மனைவி ராஜம்மாள் (45) நேற்று காலை ஐந்து மணிக்கு பரிதாபமாக உயிரிழந்தார். இதன்மூலம் பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை