உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / விபத்தில் இருவர் உயிரிழப்பு

விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருச்சி; சேலம் மாவட்டம், மூலக்காடு சாணார்பட்டியைச் சேர்ந்த மோகன்ராஜ், 27, தன் நண்பரான தினேஷ், 28, உடன், தனக்கு பெண் பார்ப்பதற்காக, சேலத்தில் இருந்து நேற்று காலை, பைக்கில் நாமக்கல் வழியாக திருச்சி சென்றார். தொட்டியம், வரதராஜபுரம் அருகே வந்தபோது, சாலை மையத் தடுப்பில் பைக் மோதி, தடுமாறியவர்கள் மீது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில், இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தொட்டியம் போலீசார் வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி