உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / கையில் பீர் பாட்டிலுடன் பஸ்சை வழி மறித்து வாலிபர் ரகளை

கையில் பீர் பாட்டிலுடன் பஸ்சை வழி மறித்து வாலிபர் ரகளை

வேலுார்:வேலுார் மாவட்டம், ஒடுகத்துாரிலிருந்து நேற்று முன்தினம் இரவு, 9:00 மணி அளவில், ஆலங்காயம் வழியாக மலை கிராமமான ஜமுனாமரத்துாருக்கு சென்ற அரசு பஸ், ஒடுகத்துார் ரவுண்டானா அருகே சென்றது. அப்போது, பைக்கில் வந்த போதை வாலிபர் ஒருவர் திடீரென இறங்கி, கையில் பீர் பாட்டிலுடன் பஸ்சை வழிமறித்து நின்றார்.அதிர்ச்சியடைந்த டிரைவர் பஸ்சை நிறுத்தி, வழி விடும்படி போதை வாலிபரிடம் கூறினார். போதை தலைக்கேறிய அந்த வாலிபர், 'டேய் நான் யார் என்று தெரியுமா; மிகப்பெரிய ரவுடி, என்னை பார்த்தாலே எல்லோரும் பயந்து ஓடுவார்கள்' என்று கூறியபடி, ஆபாசமாக பேசி ரகளையில் ஈடுபட்டார். கையில் பீர் பாட்டில் இருந்ததால், இதை பார்த்த மக்கள் அந்த வாலிபரை தட்டி கேட்கவில்லை.அப்போது பீர் பாட்டிலை, பஸ் மீது வீசுவது போல் போதை வாலிபர் நடந்து கொண்டார். இது குறித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வேப்பங்குப்பம் போலீசார் தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ