உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / சாராயம் காய்ச்ச மரப்பட்டை உரித்த 2 ஆந்திரர்கள் கைது

சாராயம் காய்ச்ச மரப்பட்டை உரித்த 2 ஆந்திரர்கள் கைது

வேலுார்: தமிழக - ஆந்திர எல்லை பகுதியில் சைனகுண்டா காப்புக்காடு, வேலுார் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ளது. ஆந்திர பதிவெண் கொண்ட ஆட்டோவில் சென்ற இருவர், மரப்பட்டைகளை வெட்டுவதாக, குடியாத்தம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறையினர் சென்றபோது, புளிய மர பட்டைகளை உரித்து கொண்டிருந்த இருவரை பிடித்தனர். விசாரணையில் ஆந்திர மாநிலம் பலமனேரி மதன்குமார், 27, வெங்கையா, 27, என்பது தெரிந்துத. கள்ளச்சாராயம் காய்ச்ச மரப்பட்டைகளை வெட்டி எடுத்து செல்வதாக தெரிவித்துள்ளனர். அவர்களிடம், 50 கிலோ மரப்பட்டைகளை பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி