மேலும் செய்திகள்
கார் மோதிய விபத்தில் முதியவர் பலி
31-Dec-2024
ஒடுகத்துார்:வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சிங்கல்பாடியை சேர்ந்தவர் சேகர், 50; துத்திப்பட்டை சேர்ந்தவர் பொன்னுரங்கம், 57. இருவரும் கட்டட தொழிலாளிகள். இருவரும், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு பள்ளிகொண்டா அடுத்த பாலாண்டிப்பட்டி பகுதியில், பஜாஜ் பைக்கில் சாலையை கடக்க முயன்றபோது எதிரே, ஆம்பூரில் இருந்து திருவள்ளூர் நோக்கி சென்று கொண்டிருந்த, இண்டிகா கார் மோதியது.இதில் இருவரும் பலியாகினர்.
31-Dec-2024