மேலும் செய்திகள்
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
29-Nov-2025
வேலுார்: குடியாத்தம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு, ஐந்தாண்டுகள் சிறை விதிக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், குடியாத்தம், முல்லை நகரை சேர்ந்தவர் முத்து, 24; தொழிலாளி. இவர், 2024 ஜூலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். மாணவியின் பெற்றோர் புகாரில், குடியாத்தம் மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில், முத்துவை கைது செய்தனர். வேலுார் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதாகிருஷ்ணன் விசாரித்து, முத்துவிற்கு, ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை, 20,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
29-Nov-2025