உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்து நாசம்

வேலுார் : திருவள்ளூர் மாவட்டம், கணக்கன்சேரியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர், 38. இவர், காட்பாடியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தன் தாயை நேற்று காலை, 'மாருதி 800' காரில், உறவினர் உதவியுடன் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். காலை, 8:30 மணிக்கு வேலுார் மாவட்டம், காட்பாடி சித்துார் பஸ் நிறுத்தம் அருகே, காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது.இதைக் கண்ட ஸ்ரீதர், காரை நிறுத்திவிட்டு, தாய் மற்றும் உறவினருடன் உடனடியாக கீழே இறங்கி தப்பினார். சிறிது நேரத்தில், கார் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. காட்பாடி தீயணைப்புத் துறையினர் சம்பவ இடம் சென்று, காரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.பேட்டரி கசிவால் மின்கசிவு ஏற்பட்டு காரில் தீப்பிடித்தது தெரியவந்தது. காட்பாடி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை