மேலும் செய்திகள்
வலிப்பு ஏற்பட்டு சிறுமி சாவு
04-Sep-2025
பேரணாம்பட்டு, பேரணாம்பட்டு அருகே, ஆற்றில் குளித்த வாலிபருக்கு, வலிப்பு ஏற்பட்டதில் நீரில் மூழ்கி பலியானார். வேலுார் மாவட்டம், பேரணாம்பட்ட அடுத்த மிட்டப்பல்லி கெம்ப சமுத்திரத்தை சேர்ந்தவர் தச்சு தொழிலாளி உமாபதி. இவரது மகன் நிக்னேஷ், 19. இவருக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்தார். நேற்று முன்தினம் மாலை, அப்பகுதியை சேர்ந்த, 3 சிறுவர்களுடன், மதினாப்பல்லி மலட்டாற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது நிக்னேஷ் நீண்ட நேரமாகியும் தண்ணீருக்குள் இருந்து வெளியே வராததால், சந்தேகமடைந்த சிறுவர்கள் சென்று பார்த்தனர். அப்போது நிக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பேரணாம்பட்டு போலீசார் விசாரிக்கின்றனர்.
04-Sep-2025