உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / வன விலங்குகளை கண்காணிக்க ஏ.ஐ., கேமரா பொருத்தம்

வன விலங்குகளை கண்காணிக்க ஏ.ஐ., கேமரா பொருத்தம்

வேலுார்:''வேலுார் மாவட்டத்தில் காப்புக்காடுகளை ஒட்டிய கிராமங்களில், வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்க, 3 இடங்களில் ஏ.ஐ., கேமரா அமைக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது,'' என, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் கூறினார்.வேலுார் மாவட்ட வனச்சரகர்கள் வனப்பகுதிகள், விலங்குகள் நடமாட்டம் குறித்து, மாவட்ட வன அலுவலர் அசோக்குமார் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அமிர்தி மினி உயிரியல் பூங்காவில், சுற்றுலா பயணிகளை அதிகளவில் வரவழைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.பின்னர் அவர், நிருபர்களிடம் கூறியதாவது: கே.வி.,குப்பம் அடுத்த துருவம் பகுதியில், சிறுத்தைகள் ஊருக்குள் நுழைவதை தடுக்கும் வகையில், ஏ.ஐ., தொழில்நுட்ப கேமரா பொருத்தி, சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க முடிந்தது. இந்நிலையில், வேலுார் மாவட்டத்தில் காப்புக்காடுகளையொட்டி கிராமங்களில் விலங்குகள் நுழைவதை தடுக்க மேலும், 3 இடங்களில், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கேமரா பொருத்த மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்த பிறகு, ஏ.ஐ., தொழில்நுட்ப கேமரா பொருத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது கோடை காலம் என்பதால், மலைகளில் தீ வைக்கும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அமிர்தி வன உயிரியல் பூங்காவை, அடுத்த கட்டமாக உயர்த்துவதற்கான நடவடிக்கைகள், அதற்கான பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ