உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / அங்கன்வாடி மைய திறப்பு விழா தி.மு.க., நிர்வாகி சிறைபிடிப்பு

அங்கன்வாடி மைய திறப்பு விழா தி.மு.க., நிர்வாகி சிறைபிடிப்பு

குடியாத்தம்: அங்கன்வாடி மைய திறப்பு விழாவில், தி.மு.க., நிர்வாகியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த வரதரெட்டி பல்லி பஞ்., உட்பட்ட பண்டபல்லி பகுதியில், 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில், 14 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை, குடியாத்தம் தி.மு.க., ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம் திறந்து வைத்தார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், பொதுமக்கள் அவரை முற்றுகையிட்டனர். 100 நாள் வேலை வழங்க கோரியும், பஞ்., தீர்மானத்தில் போடப்பட்ட நபர்களுக்கு கலைஞரின் கனவு இல்ல வீடுகளை ஒதுக்காமல், தி.மு.க., வினருக்கு ஒதுக்கியதாகவும், ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி, பருப்பு ஆகியவை தரமற்று இருப்பதாகவும் கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர், '100 நாள் வேலைக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காததால், பணி வழங்க முடியவில்லை. தொகுப்பு வீடு வழங்குவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என பொதுமக்களிடம் தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை