உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் / தாயை சித்ரவதை செய்த போதை மகன் கைது

தாயை சித்ரவதை செய்த போதை மகன் கைது

ஒடுகத்துார் : வேலுார் மாவட்டம், ஒடுகத்துார் அடுத்த சந்தைமேடு பகுதியை சேர்ந்தவர் அலமேலு, 60. இவரது கணவர் இறந்து விட்டார். இவரது மகன் அருண்குமார், 38. திருமணமாகி, இரு குழந்தைகள் உள்ளனர். அருண்குமாரின் குடிப்பழக்கத்தால், அவரின் மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பே அவரை விட்டு பிரிந்தார். தற்போது அலமேலுவுடன் வசிக்கும் அருண்குமார், தினமும் போதையில் அலமேலுவை அடித்து கொடுமைப்படுத்தி வந்தார்.நேற்று முன்தினம் மாலை தாயை அடித்து, சேலையால் கழுத்தை நெரித்து, அருகே இருந்த செங்கல்லால் தாக்கினார். வலி தாங்க முடியாத அலமேலு, மகனின் இரு கால்களையும் பிடித்து, 'அடிக்காதே, உடம்பு ரொம்ப வலிக்கிறது' என, கதறி அழுதார். இந்த வீடியோ பரவியதால், வேப்பங்குப்பம் போலீசார், அருண்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி