உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / வேலூர் /  அஞ்சல் கண்காட்சியில் டி.வி.ஆர்., தபால் தலை

 அஞ்சல் கண்காட்சியில் டி.வி.ஆர்., தபால் தலை

வேலுார்: வேலுார், தண்டபாணி முதலியார் திருமண மண்டபத்தில், மாவட்ட அளவில் இரு நாட்கள் தபால் தலை கண்காட்சி நேற்று முன்தினம் துவங்கியது. கண்காட்சியில், அரசியல் தலைவர்கள், தேச தலைவர்கள் உட்பட, 50,000 அஞ்சல் தலை, மாணவர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், 'தினமலர்' நிறுவனரும், எல்லை போராட்ட வீரருமான டி.வி.ராமசுப்பையரின் அஞ்சல் தலை, அறிஞர்கள் பட்டியலில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. தமிழ் பத்திரிகையின் வரலாறு, எல்லை போராட்டம், தேச பக்தி என பள்ளி மாணவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், டி.வி.ராமசுப்பையர் அஞ்சல் தலை இடம் பெற்றுள்ளதாகவும், மாணவ - மாணவியர் பார்வையிட்டதாகவும், வேலுார் பழங்கால நாணயங்கள், அஞ்சல் தலைகள் சேகரிப்பாளர் தமிழ்வாணன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி