மேலும் செய்திகள்
மின்சாரம் பாய்ந்து செய்யூரில் 3 பசுக்கள் பலி
07-Aug-2025
மின்சாரம் தாக்கி விவசாயி பலி
14-Aug-2025
குடியாத்தம்:அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த விவசாயி பலியானார். வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அக்ரஹாரம் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் திருப்பதி, 45; விவசாயி. இவர், நேற்று காலை தன் பசுமாட்டை மேய்ச்சலுக்கு விவசாய நிலத்திற்கு ஓட்டிச் சென்றார். அங்கு விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை கவனிக்காமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அருகிலிருந்த அவரது தம்பி ஜெயபால், 40, அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதில், திருப்பதி சம்பவ இடத்திலேயே பலியானார். ஜெயபால் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். குடியாத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Aug-2025
14-Aug-2025