மேலும் செய்திகள்
கூரை வீடு தீ பிடித்து எரிந்து பொருட்கள் நாசம்
10-Oct-2025
ஆம்பூர், ஆம்பூர் அருகே தோல் கழிவு சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தோல் கழிவுகள் எரிந்து நாசமானது.திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா, 50. இவர் கடந்த, 10 ஆண்டுக்கும் மேலாக துத்திப்பட்டு கிராமத்தில் தோல் கழிவு சேமிப்பு கிடங்கு நடத்தி வருகிறார். அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் தீ பிடித்தது. கொழுந்து விட்டு எரிந்த தீயை பார்த்த அப்பகுதி மக்கள் தகவலின் படி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் சென்று, தீயை ஒரு மணி நேரம் போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான தோல் கழிவுகள் எரிந்து நாசமானது. உமாராபாத் போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Oct-2025