பள்ளி பேருந்து மோதியதில் பெண் குழந்தை மரணம்
குடியாத்தம்: குடியாத்தம் அருகே தனியார் பள்ளி பேருந்து மோதி, தெருவில் விளையாடி கொண்டிருந்த பெண் குழந்தை உயிரிழந்தது. வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பத்தை சேர்ந்தவர் மோகன்; கூலி தொழிலாளி. இவரது மகள் துர்கா ஸ்ரீ, ஒன்னேகால் வயது. நேற்று மாலை, 5:00 மணியளவில் துர்கா ஸ்ரீ தன் வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது அந்த வழியாக வந்த மேல்பட்டியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியின் பேருந்து, துர்கா ஸ்ரீ மீது ஏறியது. இதில் உடல் நசுங்கி, துர்கா ஸ்ரீ உயிரிழந்தாள். டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடினார். குடியாத்தம் தாலுகா போலீசார், விசாரிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன், குடியாத்தம் அடுத்த பரதராமியில் பள்ளி பேருந்தில் சிக்கி, 4 வயது குழந்தை உயிரிழந்தது குறிப் பிடத்தக்கது.